சக மாணவர்களை உடல் சாரா பாலியல் வன்கொடுமை செய்ததாக 63 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் மாணவர்

பத்து பகாட், ஸ்ரீ காடிங்கில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) மாணவர் ஒருவர் ஆண் மாணவர்கள் மீது உடல் சாராத பாலியல் வன்கொடுமை செய்ததாக மொத்தம் 63 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. 17 வயதான சந்தேகநபர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிபதி சுஹைலா ஷபியுதீன் முன்னிலையில் ஒப்புக்கொண்டதாக  பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

13 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு ஆண் ஜூனியர் மாணவர்களிடம் உடல் சாரா பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் 62 குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. டிசம்பர் 2023 முதல் கடந்த மாதம் வரை பத்து பஹாட், குளுவாங் மற்றும் தங்காக் ஆகிய இடங்களில் பல பள்ளிக் கழிவறைகள், சூராவ் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 15 (a)(ii) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 20,000 ரிங்கிட்டிற்க்கு மிகாமல் அபராதம் அல்லது  இரண்டும் விதிக்கப்படலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சிறார் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக இறுதிக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அதே சட்டத்தின் 10ஆவது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000  ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.  வழக்கை குறிப்பிடுவதற்கும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் டிசம்பர் 11 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது மற்றும் வழக்கு முடிவடையும் வரை சாட்சிகளையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களையோ தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here