விதவை பெண்ணுடன் தொடர்பு.. பழங்குடியின நபரை நிர்வாணப்படுத்தி தாக்கிய கும்பல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதவை பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 48 வயது பழங்குடியின நபரை கிராம மக்கள் நிர்வாணப்படுத்தி, அடித்து, ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 14 அன்று அலிராஜ்பூர் மாவட்டத்தின் சோட்டி மால்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடியின நபரை தாக்கியபோது தடுக்க முயன்ற விதவை பெண்ணையும் கிராம மக்கள் அடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த சமயத்தில் அப்பெண்ணுக்கு கிராம மக்கள் யாரும் உதவி செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் தான் அப்பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவளது குழந்தைகளை வளர்க்க உதவி செய்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக அந்நபரை கிராம மக்கள் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here