மகாராஷ்டிராவில் வாயுக் கசிவு: பெண்கள் உள்ளிட்ட மூவர் மரணம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உரத் தொழிற்சாலையில் உள்ள உலை ஒன்று வெடித்து நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டதில் இருபெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவத்தில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன நிறுவனத்தில் வியாழக்கிழமை  மாலை 6.30 மணியளவில் வெடிப்புச் சம்பவம் நடந்தது.

இதுகுறித்து கடேகான் காவல்நிலையத்தின் மூத்த ஆய்வாளர் சங்ராம் ஷெவாலே தெரிவிக்கையில், “உரத் தொழிற்சாலையில் உள்ள உலை வெடித்ததில் ரசாயன புகை வெளியேறியது.“வாயுக் கசிவு காரணமாக அந்த உலை இருந்த பிரிவில் வேலை செய்து வந்த 12 பேர் பாதிக்கப்பட்டனர்.

“அந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் காவலாளி ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here