கோலாலம்பூர்:
சமீபகாலமாக நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது,
இம்மாதத்தில் மட்டும் இதுவரை 19 பேர் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று, மலேசியத் தீயணைப்பு, மீட்புத்துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.
எனவே, கடல் மற்றும் நீர்நிலை அருகில் உள்ள சுற்றுப்பயணத் தளங்களுக்குச் செல்லும்போது, பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், இந்தாண்டு மலேசியா முழுவதும் 258 பேர் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று கூறிய அவர், அதில் 32 பேர் பெண்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.








