வயநாடு:
நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரியங்கா கூறியுள்ளார்.
வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸின் பிரியங்கா, 6 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று தனக்கு எதிராக போட்டியிட்ட கம்யூ. வேட்பாளர் சத்யனை விட 4 லட்சத்திற்கு அதிகமான ஓட்டுக்கள் முன்னணியில் இருக்கிறார்.
இந்நிலையில், பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வயநாடு தொகுதியைச் சேர்ந்த என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,
நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவேன்.
இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி, மேலும் நீங்கள் எனக்கு அளித்த அபரிமிதமான அன்புக்கும்,ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள எனது சகாக்கள், கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள், தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரின், ஆதரவிற்கு நன்றி,நாம் அனைவரும் நம்பும் லட்சியங்களுக்காக உண்மையான வீரர்களாய் போராடியுள்ளோம்.
என் அம்மா, ராபர்ட் உள்ளிட்ட அனைவரும் எனக்கு அளித்த அன்புக்கும் தைரியத்திற்கும் எந்த நன்றியும் போதாது.
எனக்கு வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் என் சகோதரர் ராகுலுக்கு நன்றி.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.









