அலோர் ஸ்டார்:
கெடாவிலுள்ள மொத்தம் 5,376 அரசு ஊழியர்களுக்கு அம்மாநில அரசு RM2,000 சிறப்பு நிதி உதவியை இன்று அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு நிதி உதவி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு தவணைகளில் பணம் செலுத்தப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் கூறினார்.
“இதற்கான மொத்த ஒதுக்கீடு RM12 மில்லியன் என்று, 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, அவர் இதனை கூறினார்
ஒவ்வொரு அரசின் கொள்கைகள் மற்றும் முடிவை சிறப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பை மாநில அரசு பாராட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், மாநில அரசும் டிசம்பர் 1 முதல் மலேசிய ஊதிய முறையை (SSM) பொது சேவை ஊதிய முறையுடன் (SSPA) மாற்ற ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.
“இந்த அறிவிப்புக்கு இணங்க, இந்த டிசம்பரில் இருந்து SSPA ஐத் தேர்ந்தெடுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் RM30 மில்லியனை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
“அதன்படி, சம்பள உயர்வு டிசம்பர் மாத ஊதியத்தில் இருந்து அமலுக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.










