சிறுவர்களுக்கு எதுக்கு இன்ஸ்டா, பேஸ்புக்; ஆஸ்திரேலியாவில் வந்தது சட்டம்!

ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.270 கோடி (32 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டதாக, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறியிருந்தார். இதற்கு அந்த நாட்டின் மாகாண மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வரவேற்பு தெரிவித்தன.

ஆஸ்திரேலிய பார்லிமென்டில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு 102 ஓட்டுக்கள் ஆதரவாகவும், 13 ஓட்டுக்கள் எதிராகவும் கிடைத்தன. எனவே, இப்போது இந்த மசோதா சட்டமாக மாறுவது உறுதியாகிவிட்டது.

இந்த சட்டத்தை மீறி, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் தளங்களுக்கு, ரூ.270 கோடி (32 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் சில அமெரிக்க மாநிலங்கள் உள்ளிட்ட நாடுகள் பெற்றோரின் அனுமதியின்றி சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்றி உள்ளன.

ஆனால் ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாரும் பயன்படுத்த கூடாது என சட்டம் இயற்றி உள்ளதால், சமூகவலைதள நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here