பிரதமர் மோடியின் பாதுகாப்பு படையில் பெண் கமாண்டோ: புகைப்படம் வைரல்

புதுடெல்லி:இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் எங்கு சென்றாலும் அவருக்கு நிழல் போல் இருந்து பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் துணை ராணு வத்தினர் மற்றும் சி.ஏ.பி.எப். எனப்படும் மத்திய ஆயுதப்படை பிரிவினர், சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில சிறப்பு போலீஸ் படையினர் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவில் இருந்து சிறப்பாக பணிபுரி பவர்கள் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு இந்த படையில் பணியமர்த்தப்படுவார்கள்.இந்நிலையில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படையில் முதன் முறையாக பெண் கமாண்டோ ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், எஸ்.பி.சி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் கடந்த 2015-ம் ஆண்டு முதலே பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது 100 பெண் கமாண்டோக்கள் உள்ளனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் பங்கேற்க வந்த போது பெண் கமாண்டோ பாதுகாப்பு பணியில் இருந்தார். அந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here