கோலாலம்பூர்: புலாத்தான் டத்தோ ஓன் அருகே ஒரு லோரி மோதியபோது அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள் நசுங்கிய நிலையில் ஓட்டுநர் விபத்தில் இருந்து காயத்துடன் தப்பினார். புதன்கிழமை (நவம்பர் 27) இரவு 11.22 மணியளவில் பேரிடர் அழைப்பு விடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
ஹங் துவா தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஏழு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம் என்று சனிக்கிழமை (நவம்பர் 30) ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வலது கை உடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.









