சிட்னி:
வெலிங்டனிலிருந்து சிட்னி சென்றுகொண்டிருந்த ஏர் நியூசிலாந்து விமானம் ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) ஆக்லாந்துக்குத் திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணிவாக்கில் குறித்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் ஏர் நியூசிலாந்து விமானச் சேவைத் தலைவர் கியூ பியர்ஸ் கூறினார். இருப்பினும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.