கூலாய்:
செனாய், தாமான் பாஹாகியாவில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில், முதியவர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் நேற்று இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
காலை 11.45 மணியளவில், தரையில் இரத்த வெள்ளத்தில் முதியவர் ஒருவர் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று, கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி டான் செங் லீ கூறினார்.
“67 வயதான அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்றும, அவரது உடலைப் பரிசோதித்ததில், கூர்மையான பொருளால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தெரியவந்தது என்று அவர் சொன்னார்.
“பாதிக்கப்பட்டவரின் வீட்டில் இருந்து எதுவும் திருடப்படவில்லை, மேலும் சம்பவத்தின் நோக்கம் மற்றும் காரணத்தை நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம் என்றும், இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள், புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி நூர் அனியா இஸ்மாயிலை 013-9792526 என்ற எண்ணிலோ அல்லது கூலாய் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 07-6632222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.















