நொய்டாவில் YesMadam என்ற Startup நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கடுமையான பணிச்சுமை காரணமாக பணியாளரக்ள் மனஆழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பணியாளர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாளர் என பல்வேறு நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் யாரெல்லாம் மனஅழுத்தம் என கருத்து தெரிவித்தார்களோ, அவர்களை எல்லாம் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவே விளக்கமான மெயில் அனுப்பப்படும் என HR மெயில் அனுப்பியுள்ளார். இந்த மெயில் தற்போது இணைய தளத்தில் கசிந்துள்ளது.
HR-ன் அந்த கடிதத்தில் “டியர் டீம், சமீபத்தில் நாங்கள் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் பணியின்போது மனஆழுத்தம் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினோம். உங்களில் பெரும்பாலானோர் கருத்துகளை தெரிவித்தீர்கள்.
நாங்கள் அதற்கு மிகவும் கவனமாக எடுத்துக் கொண்டு அதற்கு மதிப்பளிக்கிறோம். ஆரோக்கியம் மற்றும் வேலைக்கு ஆதரவான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவனமாக உங்களது கருத்தை பரிசீலனை செய்தோம்.
யார் ஒருவரும் பணியின்போது மனஆழுத்தம் அடையக்கூடாது. இதனால் யார் ஒருவரும் மனஅழுத்தம் என்று கருதுகின்றீர்களோ அவர்களை வேலையில் இருந்து நீக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது. நீக்கப்படும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான விவரங்களை மெறுவீர்கள். உங்களுடைய பங்களிப்பிற்கு நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த நிறுவனம் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. கருத்து சொன்னது குத்தமாடா…? என பணியாளர்கள் தலையில் கை வைத்துள்ளனர்.