புதுடெல்லி,இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு இண்டிகோ விமான நிறுவனம் தினமும் 2 விமானங்களை இயக்கி வருகிறது. ஒரு விமானம் டெல்லியில் இருந்தும், மற்றொரு விமானம் மும்பையில் இருந்தும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் இஸ்தான்புல் நகரில் இருந்து டெல்லிக்கு வர வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்தவதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்களுக்கு தேவையான தங்கும் வசதிகள் மற்றும் மாற்று விமானத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும் என இண்டிகோ நிறுவனம் உறுதியளித்தது.