மயோட்டா தீவை புரட்டிய புயல்.. உயிரிழப்புகள் ஆயிரத்தை கடக்கலாம்.. உள்துறை அமைச்சகம் அச்சம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது.

கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மயோட்டே புயல் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மிக சக்திவாய்ந்த சூறாவளியாக மயோட்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பாதிப்பில் சிக்கி பல நூறு பேரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் பிரெஞ்சு அதிகாரி தெரிவித்தார்.

“உயிரிழந்தோர் எண்ணிக்கை நிச்சயமாக நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன், ஒருவேளை இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களை கூட கடக்கலாம்” என்று ஃபிரான்கோஸ் சேவியர் பெய்வில் கூறினார்.அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறும் போது, “பாதிக்கப்பட்டவர்களை கண்கெடுப்பது கடினமாகவே இருக்கும். தற்போதைய சூழலில் உறுதியான எண்ணிக்கையை கூற முடியாது,” என்று தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here