EMAIL-க்கு போட்டியாக X-MAIL.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியது. இதன்மூலம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here