மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு

மும்பையில் சுமார் 100-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு மீது, வேகமாக சென்ற கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால பயணிகள் படகு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 70-க்கும் அதிகமான பயணிகளை மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். முதற்கட்ட தகவிலில் ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள Elephanta Caves பகுதிக்கு படகு மூலம் மக்கள் செல்வது வழக்கம். இன்று அவ்வாறு செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.இந்திய கடற்படை, ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆணையம், கடலோர காவல்படை ஆகிய மூன்றும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here