சொந்த நாட்டு விமானிகள் மீதே தவறுதலாக துப்பாக்கி சூடு… அமெரிக்காவில் பரபரப்பு

தம்பா,அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செங்கடலின் மேலே எப்/ஏ-18 ரக போர் விமானம் ஒன்று இன்று பறந்து சென்றது. அமெரிக்காவை சேர்ந்த அந்த விமானத்தின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 விமானிகளில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.

இதுபற்றி அமெரிக்க ராணுவத்தின் மத்திய படை வெளியிட்ட செய்தி குறிப்பில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமேன் என்ற விமானந்தாங்கி கப்பலில் இருந்து இந்த விமானம் பறந்து சென்றுள்ளது. எனினும், இதுபற்றி அறியாமல், இந்த கப்பல் குழுவுடன் இணைந்த மற்றொரு கப்பலான யு.எஸ்.எஸ். கெட்டிஸ்பர்க் கப்பலில் இருந்தவர்கள் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் சூழலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர். இதனை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க போர் விமானம் பறந்தபோது அதனை தவறுதலாக, அமெரிக்க கப்பலில் இருந்தவர்கள் சுட்டுள்ளனர். எனினும், நட்பு ரீதியாக சுடப்பட்ட விவகாரம் என இதனை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here