கோத்தா பாரு: தும்பாட்டில் உள்ள ஜாலான் டெர்பக்கில் நிறுத்த உத்தரவை மீறிய 10 மியான்மர் நாட்டவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். 10 பேரில் ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்குவர் என்று தும்பாட் காவல்துறைத் தலைவர் கைரி ஷாஃபி கூறினார். இரவு 7.40 மணிக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டுநர் இருந்த காரை ஒரு போலீஸ் MPV பிரிவு கண்டுபிடித்ததாகவும், அதன் ஓட்டுநர் சந்தேகத்திற்குரியவராகத் தோன்றியதாகவும் கைரி கூறினார்.
காரை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். ஆனால் ஓட்டுநர் அவர்களைப் புறக்கணித்து வகாஃப் பாரு நோக்கி வேகமாகச் சென்றார். பிறகு தெமலாங்கில் உள்ள கம்போங் பெச்சாவை அடைந்ததும், வாகனம் பல கார்களின் மீது மோதி சாலையை விட்டு விலகிச் சென்றது. ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில் வானக பட்டை எண் போலியானது என்றும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 மற்றும் குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55E மற்றும் 6(1) (c) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காக மியான்மர் நாட்டவர்கள் தும்பாட் காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.