கோலாலம்பூர்: டிசம்பர் 26, 2024 முதல் ஜன. 1, 2025 வரையிலான காலக்கட்டத்தில் ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு மூன்று சென்களால் 3 ரிங்கிட் 22 காசிலிருந்து இருந்து 3 ரிங்கிட் 25 காசாக அதிகரித்துள்ளது.
இதே காலத்திற்கான RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 ஆக உள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.95 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலை நிர்ணயத்தின் அடிப்படையில் தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையை பயன்படுத்தி விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று புதன்கிழமை (டிசம்பர் 25) அது ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.