சாலை விபத்தில் 24 வயதான தாயும் 3 வயது மகனும் பலி

ஈப்போ: மஞ்சோங்கில் உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் 212 கி.மீட்டரில்  நடந்த விபத்தில் ஒரு தாயும் அவரது மூன்று வயது குழந்தையும் இறந்தனர். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறுகையில், வியாழக்கிழமை (டிசம்பர் 26) அதிகாலை 5.15 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

24 வயதான நோர் ஃபதிலா முகமட் அஸ்லானும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் அவரது கணவர் முகமது ஷுகுர் அகமது 24, அவர்களது மூன்று வயது மகன் மற்றும் இருவர் அடங்குவர். அகமது அய்சத் காலித் அப்துல் மனன் (27), முகமது இக்பால் தம்சீர் (31) ஆகியோர் வேறு காரில் இருந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று சபரோட்ஸி கூறினார். இறந்தவர்கள் அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்  என்று அவர் மேலும் கூறினார். காலை 7.10 மணியளவில் மீட்பு பணி முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here