ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு

போபால்,குஜராத் மாநிலம் குனா மாவட்டம் பிப்லியா கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுமித் மினா (வயது 10). இச்சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் கிராமத்தின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 140 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 16 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சுமித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here