தற்போது உலகத் தரவரிசையில் 69 வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் அணி, 163 வதாக உள்ள மாலத்தீவு அணியுடன் இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது. இப்போட்டி பெங்களூருவில் உள்ள படுகோன்-டிராவிட் மையத்தில் நடக்க உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சங்கம் வெளியிட்ட செய்தியில்,” இந்தியா, மாலத்தீவு அணிகள் வரும் 30, 2025, ஜன. 2ல் பெங்களூருவில் நடக்கும் நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளன,’ என தெரிவித்துள்ளது.









