டெல்லியில் ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி:பிரதமர் மோடி இன்று டெல்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே சுமார் ரூ.4,600 கோடி மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் 13 கி.மீ. தூரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சாஹிபாபாத் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி, கவுண்டரில் செல்போன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து நமோ பாரத் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் ரூ.1,200 கோடி மதிப்பிலான டெல்லி மெட்ரோ 4-ம் கட்டத்தின் ஜனக்புரி-கிருஷ்ணா பார்க் இடையேயான 2.8 கிமீ தூரத்தை திறந்து வைத்தார்.சுமார் ரூ.6,230 கோடி மதிப்பிலான டெல்லி மெட்ரோ 4-ம் கட்டத்தின் 26.5 கிமீ ரிதாலா-குண்ட்லி பகுதிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடம் டெல்லியில் உள்ள ரிதாலாவை அரியானாவில் உள்ள நாதுபூருடன் (குண்ட்லி) இணைக்கும்.

டெல்லி ரோகினி பகுதியில் ரூ.185 கோடியில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கானபுதிய அதிநவீன கட்டிடத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வளாகத்தில் அதிநவீன சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும். புதிய கட்டிடத்தில் நிர்வாகப் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஒரு பிரத்யேக சிகிச்சை பிரிவு ஆகியவை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here