கோலாலம்பூர் :
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான கூடுதல் உத்தரவு எதையும் உள்துறை அமைச்சகம் பெறவில்லை.
கடந்த 2024 பிப்ரவரி 2 அன்று கிடைத்த ஒரே ஒரு கடிதத்தில், நஜிப்பை வீட்டுக் காவலில் வைத்திருப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை குறிப்பாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவிலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அதாவது சிறைத்துறைக்கு கிடைத்த கடிதத்தில் வீட்டுக் காவல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.
மேலும் “நஜிப்பின் தண்டனையை ஆறு ஆண்டுகளாகக் குறைப்பது, மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை RM50 மில்லியனாக குறைப்பது தொடர்பாக மட்டுமே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.