கோலாலம்பூர்:
நாட்டின் பழம்பெரும் பாடகர் டத்தோ ஜமால் அப்தில்லா தனது 66 வயதில் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்,
“இறைவனின் ஆசியால், அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்தது, தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். எங்களை ஆசீர்வதித்ததற்காக இறைவனுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ”என்று ஜமால் கூறியதாக ஆஸ்ட்ரோ அவானி மேற்கோள் காட்டியது.
இச்செய்தியை தொடர்ந்து அவரது நண்பர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை குறி வருகின்றனர்.