நம்முடைய கர்ம வினைகள் நீங்கி சிறப்பான நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக கருதுவது தான் பிரதோஷம். வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை பிரதோஷம் என்பது வரும்.
பிரதோஷம் வரக்கூடிய கிழமையை பொறுத்து அந்த பிரதோஷத்தின் பலன் என்பது வேறுபடும். இதில் வரக்கூடிய மிகவும் முக்கியமான பிரதோஷமாக திகழ்வதுதான் சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷம்.
சனி மகா பிரதோஷ நாளன்றுதான் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார் என்பதால் மற்ற பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்யாதவர்கள் கூட இந்த சனி மஹா பிரதோஷ நாளில் வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட சனி மகா பிரதோஷ நாளன்று வீட்டிலேயே எளிமையான முறையில் சிவபெருமானை வழிபாடு செய்து கோடி புண்ணியத்தை எப்படி பெறலாம் .
மகா சனி பிரதோஷ வழிபாடு சனி மகா பிரதோஷ நாளன்று சிவபெருமானை முழுமனதோடு நினைத்து தங்களால் இயன்ற அளவு விரதம் இருந்து சிவபெருமானின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நடக்கக்கூடிய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அவரிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று எதுவுமே கேட்காமல் அவரை தரிசனம் செய்து வழிபாடு செய்தால் மட்டும் போதும் அவரே நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு தேவையான அனைத்தையும் அருள்வார் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே எந்த முறையில் வழிபாடு செய்யலாம். சனி மகா பிரதோஷ நாளன்று விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டில் இருக்கக் கூடிய சிவலிங்கத்திற்கு இந்த முறையில் வழிபாடு செய்தோம் என்றாலே நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.
பிரதோஷ நேரமாக கருதப்படக் கூடிய நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். ஒருவேளை அந்த நேரத்தில் பூஜை செய்ய இயலவில்லை என்பவர்கள் இரவு 9:30 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம். வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு வில்வ இலைகளால் சிவபெருமானின் மந்திரத்தை கூறி சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம், தயிர் சாதம் வைக்கலாம், வெற்றிலை பாக்கு வாழைப்பழம் தேங்காய் வைக்கலாம், இவை எதுவுமே செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் ஒரு டம்ளரில் காய்ச்சிய பசும்பாலை சிறிது இனிப்பு சேர்த்து வைக்கலாம், அதுவும் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் சுத்தமான தண்ணீரை மட்டுமாவது பிடித்து சிவபெருமானுக்கு முன்பாக வைக்க வேண்டும். வில்வ இலைகளால் சிவபெருமானை அர்ச்சனை செய்யும் பொழுது இந்த ஒரு மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்தோம் என்றால் நமக்கு அபரிவிதமான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மந்திரத்தை அர்ச்சனை செய்யும் பொழுது மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. சனிப்பிரதோஷ நாள் முழுவதுமே இந்த மந்திரத்தை நம்முடைய மனதிற்குள் கூறிக் கொண்டே இருந்தோம் என்றாலும் சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்கும். ஆலயத்திற்கு செல்பவர்கள் ஆலயத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை மனதிற்குள் 108 முறையோ, 1008 முறையோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரமும் உச்சரிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
மந்திரம் சிவ சிவ சிவாய நமஹ இதையும் படிக்கலாமே: நல்ல கணவன் கிடைக்க வழிபாடு சிவபெருமானுக்கு உகந்த சனி மகா பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைத்து இந்த முறையில் எளிமையாக வீட்டிலேயே பூஜை செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு கோடி புண்ணியங்கள் அவர்களை வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.




















