நமது ஒற்றுமையின் அடையாளம் பொங்கல் விழா- கோபிந்த் சிங்

பல இன மக்கள் நம் நாட்டில் நாம் நட்புறவுடனும், சகோதரத்துவடனும் அனைத்து பண்டிகளையும் கொண்டாடி வருகிறோம்.  அந்த வகையில் நமது ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு நன்னாள் இந்த தைப் பொங்கலாகும்.

பொங்கல் திருநாலான இன்று டாமன்சாரா டாமாயில் பொங்கல் கலை இரவு நிகழ்ச்சிக்கு திரண்டிருப்பபவர்களை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும், டிஜிட்டல் அமைச்சருமான  கோபிந்த் சிங் டியோ பொங்கல் கலை இரவினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது தெரிவித்தார்.

டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு இத்தொகுதி மக்கள் வழங்கும் ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற பிரவாசி மாநாட்டில் நான் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு டிஜிட்டல் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிஜிட்டல் துறையின் அசுர வளர்ச்சிக்கேற்ப நாமும் வளர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக குறு – சிறு தொழில் முனைவர்களின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டங்களை பயன்படுத்தி  அனைவரும் இணைந்து முன்னேறுவோம் என்று கோபிந்த் தமதுரையில் தெரிவித்தார்.

இதற்கிடையில் டாமன்சாரா டாமாய் இந்திய சமூக நல சங்கத்தின் தலைவர் ரமேஷ் தமதுரையில் இந்த பொங்கல் கலை விழாவை சிறப்பாக ஏற்பாடு உதவிய சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3 நாட்களாக இரவு பகல் பாராமல் இந்த பொங்கல் கலை விழாவிற்காக பாடுபட்டிருக்கின்றனர்.

இந்த பொங்கல் விழா பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற உறுப்பினர் சுரேஷ் கங்கையா,  கோத்தா டாமன்சாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் நசீர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் கலை விழாவினை சிறப்பிக்கும் வகையில் 350 பேருக்கு உடைகள், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு, அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here