வால்மார்ட் நிறுவனத்தின் புதிய லோகோவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனத்தில் அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

இந்நிலையில், வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவின் பின்புற நிறத்தை மட்டும் அடர் நீல நிறத்தில் மாற்றி அதனை புதிய லோகோ என்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் அதன் புதிய லோகோவை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவையே பட்டி டிங்கரிங் செய்து புதிய லோகோவாக வெளியிட்டுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here