வியாழக்கிழமை (ஜனவரி 16) கோல தெரெங்கானுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14 ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் 17 வயது சிறுவன் இறந்து கிடந்தான். வியாழக்கிழமை நண்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் தரையைத் துடைத்துக்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி சிறுவனின் சடலத்தைக் கண்டெடுத்ததாகக் கூறப்படுகிறது.
கோல தெரெங்கானு OCPD உதவி ஆணையர் அஸ்லி முகமட் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, இதுவரை, இந்த சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் மேலதிக விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன. பாதிக்கப்பட்டவரின் நண்பர்களுடனான நேர்காணலின் அடிப்படையில், சிறுவன் மச்சாங், கிளாந்தனில் இருந்து வந்து குடியிருப்பின் 14ஆவது மாடியில் தங்கியிருந்தான்.
குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் மேலதிக விசாரணைகள் இன்னும் நடத்தப்படுகின்றன என்று அவர் மலாய் மொழி நாளிதழான சினார் ஹரியான் மேற்கோளிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு (HSNZ) அனுப்பப்பட்டதாகவும், வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அஸ்லி கூறினார்.









