எல்லா கடந்த ஆன்லைன் சூதாட்டத்தையும் தொலைத்தொடர்பு மோசடிகளையும் முறியடிக்க ஆசியான் நாடுகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இன்று நடைபெறக்கூடிய ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார். நாளை நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயங்களில் இதுவும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். எல்லை கடந்த ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் மோசடிகளை ஒடுக்குவதில் ஆசியான் நாடுகளுக்கு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
இந்த விஷயத்தில் உதவ சீன அரசாங்கமும் முன்வந்திருக்கறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி நாங்கள் விவாதிப்போம். ஆசியான் குடும்பத்தில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழிகள் உகறித்தும் இன்று மொதுவாக விதாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இன்றைய அரசியல் பொருளாதார சுழ்நிலையில் ஆசியான் ஒன்றுபடாவிட்டால் அது ஓர் இழப்பாக அமையும். ஆகவேதான் நாம் கூட்டாகச் செயல்படுவதற்கு சிறந்த அணுகுமுறையைத் செய்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.
லங்காவியில் உள்ள அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேற்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மரிஸ் ஸ்ங்கியம் போன்ஸாவுடன் சந்திப்பு நடத்திய பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார். எல்லை கடந்த ஆன்லைன் சுதாட்டம் தொலைத்தொடர்பு மோசடி போன்ற கிரிமினல் செயவ்களை ஒடுக்குவதற்கு இந்த நாடுகளுடன் ஒத்துழணைக்க சீனா தயாராக உள்ளது என்று நேற்று தலைநகர் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வோங் இ அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பெய்ஜிங்கில் நேற்று 10 ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அரச தந்திரிகளுடன் அவர் நடத்தினார். தாய்லாந்து மியன்மார் எல்லையில் தொலைத்தொடர்பு மோசடி, ஆன்லைன் சூதாட்டம் ஆகிய கிரிமினல் செயல்கள் சீன மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.









