டேசாருவில் கரை ஒதுங்கிய ஆடவரின் சடலம்

கோத்தா திங்கி: பந்தாய் டேசாருவில் இன்று காலை 7.30 மணியளவில் வெள்ளை நிற ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்த அடையாளம் தெரியாத நடுத்தர வயது ஆண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது.

கரை ஒதுங்கிய ஆடவரின் வயது 30 முதல் 40 இருக்கும் என்று நம்பப்படுகிறது என்று கோத்தா திங்கி காவல்துறைத் தலைவர் யூசோப் ஓத்மான் தெரிவித்தார். பிரேத பரிசோதனையில் அந்த நபர் நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டதாக யூசோப் கூறினார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here