டிரம்ப் பதவியேற்பு விழா: தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு

புதுடெல்லி:அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.

இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக வரும் 20-ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அம்பானி தம்பதியினர் அமெரிக்கா செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here