கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது

லக்னோ:உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும்.

கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கும்பமேளாவில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.இன்று மட்டும் மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர்.
அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின்போது சுமார் 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும் பிரயாக்ராஜ் நகரத்தில் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை.பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் முக்கிய விழா நாட்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here