மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். 6 மாத விசாரணைக்கு பிறகு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் 20 வயதான 2 ஆம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர். தாயுடன் இஎஸ்ஐ குடியிருப்பில் அப்பெண் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலமுறை போன் செய்தும் மகள் பதிலளிக்கவில்லை. எனவே குடியிருப்பு வீட்டின் பூட்டிய அறைக் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிய நிலயில் இருந்ததை தாய் பார்த்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டபோதோலும் மாணவி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மாணவி ஏற்கனேவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அறையில் தற்கொலை குறிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












