சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற வெற்றிமாறனின் “பேட் கேர்ள்”

நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாம் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் ‘பேட் கேர்ள்’ திரைப்பட போட்டி பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவானது ஜனவரி 30ம் தேதியில் இருந்து பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

காக்கா முட்டை விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .இப்படத்தின் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகளையும் காதல் தேர்வுகளையும் மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

இந்நிலையில் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை வென்றுள்ளது. ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் இருந்து வரக்கூடிய திரைப்படங்களுக்கென தனித்த அங்கீகாரமாக இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு இயக்குநரின் முதல் மற்றும் இரண்டாவது படைப்புதான் இந்த பிரிவின் கீழ் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த வகையில் அறிமுக இயக்குநரான வர்ஷா பரத்தின் ‘பேட் கேர்ள்’ படத்திற்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here