பிரேசிலில் சோகம்: சிறிய ரக விமானம் தரையில் மோதி 2 பேர் பலி

பிரேசிலா:தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பிசியான சாலையில் மோதியது.இந்த விபத்தில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here