நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நிகழக்கூடிய ஒவ்வொரு செயலும் நம்முடைய கையில் இருக்கக்கூடிய பணத்தைப் பொறுத்து அமைகிறது. அப்படிப்பட்ட பணம் நம்மிடம் சேர வேண்டும் என்றால் அதற்கு பண வசியம் என்பது உண்டாக வேண்டும். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணவசியம் இல்லை என்றால் நாம் சம்பாதித்த பணம் நம்முடைய கையில் நிற்கவே நிற்காது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பண வசியத்தை ஏற்படுத்துவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தை பௌர்ணமி பரிகாரம் பணவசியம் ஏற்படுவதற்கு என்று பல பரிகாரங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில தினங்களில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் அதீத பலனைத் தரும். அந்த வகையில் தை பௌர்ணமி அன்று இரவு நாம் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து வைப்பதன் மூலம் நமக்கு பண வசியம் உண்டாகும். நம்மிடம் வரக்கூடிய பணம் நம்மிடமே தங்கும்.
இந்த பரிகாரத்தை ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நாம் செய்யலாம். அதிலும் குறிப்பாக தை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் நாம் செய்யும் பொழுது அதற்கு அதீத பலன் கிடைக்கும். இதை பௌர்ணமி இரவு என்று இருக்கிறதோ அன்றைய நாளில் தான் செய்ய வேண்டும். அந்த வகையில் தை மாத பௌர்ணமி இன்று இரவு இருக்கிறது. இந்த நாளில் நாம் குறிப்பிட்ட மூன்று பொருட்களை மட்டும் நம்முடைய வீட்டு நிலை வாசலில் வைப்பதன் மூலம் நமக்கு பணவரவு உண்டாகும். அந்த பொருட்கள்தான் பண வசியத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களாக கருதப்படக் கூடிய பொருட்கள்.
இதை இரவு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு தட்டு, இலை போன்ற ஏதாவது ஒன்றில் வைத்து நிலைவாசலுக்கு வெளியே வைத்து விட வேண்டும். அந்த பொருட்கள் 3 ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம், ஒரு சிறிய துண்டு வெட்டிவேர். இவற்றை வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து வாசலை திறக்கும் பொழுது இந்த மூன்று பொருட்களையும் எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விடலாம். பூஜை அறையில் நாம் தூபம் போடும் பொழுது இந்த ஏலக்காய் பச்சை கற்பூரம் மற்றும் வெட்டிவேரை கலந்து தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக பணம் வைக்கும் இடத்தில் காட்ட வேண்டும்.
இப்படி நாம் தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டுவதன் மூலம் பணவசியத்தை தடுக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும். நமக்கு இருக்கக்கூடிய பணத் தடைகளும் நீங்கும். பணவரவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.