தைவானில் பல்பொருள் அங்காடியில் கியாஸ் வெடிப்பு; 4 பேர் பலி

தைப்பே,தைவானில் தைசங் நகரில் ஷின் கோங் மித்சுகோஷி என்ற பெயரிலான பல்பொருள் அங்காடி ஒன்று 12-வது தளத்தில் இயங்கி வருகிறது. இதில், உணவு விற்பனை செய்யும் பகுதியில் திடீரென இன்று காலை கியாஸ் வெடிப்பு ஏற்பட்டது. இதில், கட்டிடத்தின் வெளிப்புற பகுதிகள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் சீனாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மக்காவ் பகுதியில் இருந்து வந்துள்ளனர். ஒரு குடும்பத்திலுள்ள 7 பேர் சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் இவர்கள் பலியாகி உள்ளனர். இதனை மக்காவ் சுற்றுலா அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது.இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் இன்று காலை 11.30 மணியளவில் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.

இந்த சம்பவ பகுதிக்கு அருகே நகர மேயர் லு ஷியோவ்-யென்னின் அலுவலகம் அமைந்துள்ளது. கியாஸ் வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியை உணர்ந்தேன் என செய்தியாளர்களிடம் பேசும்போது யென் கூறியுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கும்படி அரசின் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் அதிபர் லாய் சிங்-தே உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here