பாலியல் சேவை வழங்கிய தனித்து வாழும் தாய்க்கு RM2,500 அபராதம்

மூவார்:

கடந்த மாதம் இங்குள்ள ஒரு ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தோனேசிய தனித்து வாழும் தாய்க்கு மூவார் மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

36 வயதான செண்டியானா பாருஸ் என்ற பெண்ணுக்கு மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலிட் RM2,500 அபராதம் விதித்தார். அதனை அவர் செலுத்த தவறினால் நான்கு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரித்தார்.

“நான் இப்போதுதான் மலேசியாவிற்கு வந்தேன், இந்த தவறை செய்ததால் நான் பிடிபட்டுவிட்டேன்” என்று கூறி, இரண்டு பிள்ளைகளின் தாயான அவர் மன்னிப்புக் கோரினார்.

கடந்த ஜனவரி 31 அன்று இரவு 10.20 மணியளவில் ஜாலான் பெட்ரியில் உள்ள ஒரு ஹோட்டலில் குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கின் உண்மைகளின்படி, விபச்சார நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீசார் குறித்த ஹோட்டலில் சோதனை நடத்தினர்.

அறைக் கதவைத் தட்டியபோது, ​​அரை நிர்வாண கோலத்தில் ஒரு ஆடவர் உள்ளே இருந்ததாக, ​​குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் போலீசார் ஆய்வு செய்ததில் அவரது பையில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஆணுறைகள் எண்ணெய் மற்றும் RM520 இருந்தது என்றும், அதேநேரம் பணம், செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here