மடானி அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை: தோட்டப் பாட்டாளிகளின் சொந்த வீடுகள் கனவு நினைவாகிறது

பெஸ்தாரி ஜெயா மடானி மக்கள் வீடமைப்புத் திட்டமானது தோட்டப் பாட்டாளிகள் வீடமைப்புத் திட்டங்களில் தோட்டம் – அரசாங்கம் ஒத்துழைப்பு முன்மாதிரியை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்தார்.

தோட்ட நிர்வாகங்கள் நிலம் தந்தால் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் வழி தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்த ஒத்துழைப்பு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என்று அவர் சொன்னார்.

இந்த ஒத்துழைப்பு முன் மாதிரி வழியில் பெஸ்தாரி ஜெயா மடானி ஹார்மோனி மக்கள் வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் எஸ்டேட் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறது.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு இந்த வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளும் என்று கூறிய பிரதமர், இதன் வழி சொந்த வீடுகள் கேட்டு 27 ஆண்டுகளாக போராடி வரும் தோட்டப் பாட்டாளிகளுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என்றார்.

வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் நில உரிமையாளர் டான்ஸ்ரீ வின்சன்ட் டானுடன் பேசி நிலத்தை பெற்று தந்திருக்கிறார் என்றும் அன்வார் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here