வீட்டின் தூய்மை, நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை மகாலட்சுமியின் அருளை ஈர்த்து செல்வ வளத்தை அதிகரிக்கும். நம் அன்றாடப் பழக்கவழக்கங்கள் வீட்டின் ஆற்றல் ஓட்டத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. வீட்டில் தினமும் விளக்கேற்றுவது, வழிபாடு செய்வது ஆகியவை செல்வ வளத்தை பெருக்குவதுடன், வீட்டில் தெய்வீக ஆற்றலை குடியேற வைக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இது தவிர வீட்டில் என்னென்ன சிறிய விஷயங்களை தினமும் செய்தால் நன்மைகள் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1. வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாமல் இருந்தால் தரித்திரம் வராது.
2. காலையில் முதலில் பாலைத் தொட்டால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
3. இரவில் பானையில் கொஞ்சம் சாப்பாடு இருக்க வேண்டும். முழுமையாக காலி செய்து வைக்கக் கூடாது.
4. ஓடாத கடிகாரம் தரித்திரம் உண்டாக்கும். அதனால் ஓடாத அல்லது பழுதான பொருட்களை வீட்டில் வைக்கக் கூடாது.
5. உடைந்த கண்ணாடியை வைத்திருந்தாலும், அவற்றில் முகம் பார்த்தாலும் அதிர்ஷ்டம் குறையும்.
6. காலையில் பெண்கள் சமையல் அறையில் முதலில் புளியைத் தொட்டால் ஐஸ்வர்யம் போகும். அதற்கு பதிலாக மஞ்சள், பால் ஆகியவற்றை தொடுவது சிறப்பு.
7. சமையல் அறையில் கண்ணாடி வைக்கக் கூடாது.
8. அரிசியை படியில் எடுத்தால் மட்டுமே ஐஸ்வர்யம் பெருகும். இன்று பலரும் இதை செய்யாததே பலரது வீடுகளில் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க காரணமாக இருக்கும்.
செல்வம் பெருகிக் கொண்டே இருக்க
1. புதன்கிழமை அன்று ஒரு புதிய மண் பானையை வாங்கி, அதுனை நன்கு சுத்தம் செய்த பின், அதில் கல் உப்பை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
2. அதில் 1 ரூபாய் நாணயத்தை யாருக்கும் தெரியாமல் அந்த பானையில் உப்போடு சேர்த்து மறைத்து வைக்க வேண்டும்.
3. தொடர்ந்து 18 புதன்கிழமைகளில் இதைச் செய்து வர வேண்டும்.
4. இந்த 18 நாணயங்களையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி, பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.
5. நீங்கள் எப்போதெல்லாம் கடன் அடைக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த 1 ரூபாய் நாணயத்தையும் சேர்த்து, கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து, செல்வம் பெருகும்.




















