சிலாங்கூர், காப்பாரில் உள்ள ஜாலான் புக்கிட் செராக்கா என்ற இடத்தில் இன்று அதிகாலை ஒரு கார் போலீஸ் லோரி மீது மோதியதில் தீப்பிடித்தது. காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி நூருல் அஸ்மான் முகமது கூறுகையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கார் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்து விட்டது.
இன்று காலை சுமார் 6.50 மணியளவில் தனது குழுவுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார். காரின் ஓட்டுநருக்கு கால் முறிந்தது, மூன்று காவல்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று அவர் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்ததாக நூருல் அஸ்மான் மேலும் கூறினார்.