ஜார்ஜ் டவுன்: கட்சியின் மூத்த தலைவர் டான் ஸ்ரீ லிம் கிட் சியாங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற பாராட்டு விருந்தின் முடிவில், பினாங்கு டிஏபி தலைவர் ஸ்டீவன் சிம்மை டிஏபியின் உயர்மட்டத் தலைவர் ஒருவரின் நெருங்கிய உதவியாளர் சரமாரியாக வசைப்பாடியுள்ளார். அதன் தொடர்பில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அந்த நபர் முதலில் ஹொக்கியன் மொழியில் கத்துவது கேட்டது.
சில மீட்டர்கள் பின்னால் நின்று, அந்த நபர் சிம்மை தொடர்ந்து திட்டினார். பின்னர் அவரை கான்டோனீஸ் மொழியில் “ஃபேன் குவாட் ஜாய்” (துரோகி) என்று முத்திரை குத்துவது கேட்டது. ஏ ஸ்டீவன், நான் சொல்வது தவறா? நீங்கள் ஒரு துரோகி, இல்லையா?” என்று அவர் கூறினார். சனிக்கிழமை (பிப்ரவரி 15) ஹான் சியாங் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வின் போது சிம் கவலைப்படாமல், தனது ஆதரவாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஈடுபட்டார்.
இது தொடர்பில் ஸ்டீவன் சிம்மை தொடர்புக் கொண்டு கேட்டபோது ”லாவோ டாவின் (பிக் பிரதர்; கிட் சியாங்கிற்கு மரியாதைக்குரிய சொல்)” பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இந்த இரவு உணவு வழங்கப்பட்டது. முக்கியமானது என்னவென்றால், லாவோ டா மகிழ்ச்சியாக இருக்கிறார். அனைத்து தோழர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுதான் மிக முக்கியமானது. மற்ற அனைத்தும் முக்கியமில்லை என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
நீண்டகாலமாக கட்சித் தலைவராக இருந்த லிம் கிட் சியாங்கின் 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இந்த இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்ப கொண்டாட்டத்தில் அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் காட்சிகள் இடம்பெற்றன. டிஏபி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 950 விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த இரவு உணவு, கிட் சியாங்கின் பிறந்தநாளைக் கொண்டாடும் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.















