தலைமை மற்றும் AI படிப்புகளுக்காக ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசு RM9 மில்லியன் ஒதுக்கீடு

மலாக்கா:

தலைமை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) படிப்புகளுக்கு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் இந்த ஆண்டு RM9 மில்லியன் ஒதுக்கியுள்ளது என்று கல்வி அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ரூஜி உபி தெரிவித்தார்.

இந்த இரண்டு துறைகளிலும் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக அமைச்சகம் மேற்கொண்டுள்ள ஒரு முன்னோடி திட்டம் இது என்று அவர் சொன்னார்.

இது நாட்டின் கல்வி முறையை உயர் மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினின் வழி நடத்தலின் கீழ், மிகவும் திறமையான, இரக்கமுள்ள மற்றும் அக்கறையுள்ள மடானி சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயிற்சி பெறுவார்கள் என்றும், ஒவ்வொரு பாடநெறியும் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் ரூஜி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு அமைச்சு, மாநிலக் கல்வித் துறைகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து தகுதியான ஆசிரியர்களைக் கண்டறியும் என்றும், கடந்த காலங்களில், இவ்வாறு ஆசிரியர்கள் மேம்படுத்தப்பட்ட பாடநெறிகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர், ஆனால் குறித்த கற்பித்தல் மற்றும் கற்றல் (PdP) முறை நாடளாவிய ரீதியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here