குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட முதல் நாளே 3 மாத குழந்தை உயிரிழப்பு

ஷா ஆலாம்:

டந்த திங்கட்கிழமை இங்குள்ள செத்தியா ஆலாமில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையிடமிருந்து சம்பந்தப்பட்ட நாளில் மதியம் 2.31 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

விசாரணையில், பாதிக்கப்பட்ட குழந்தையை அவரது தந்தை முதன்முதலில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு அன்று காலை 8.30 மணியளவில் அனுப்பியதாக கண்டறியப்பட்டுள்ளது.

“காலை 10.30 மணியளவில், குழந்தை சுயநினைவின்றி இருப்பதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தைக்கு தினப்பராமரிப்பு மையத்தின் மேலாளர் தெரிவித்தார். “பாதிக்கப்பட்ட குழந்தை சுயநினைவற்ற நிலையில் ஷா ஆலாம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது , இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை முடிவுகள் ஆய்வகத்தின் விசாரணையில் உள்ளது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெளிப்புற அல்லது உள் காயங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

“குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் படி இவ்வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐம்பதாயிரம் ரிங்கிட்டுக்கு மிகாமல் அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.

இவ்வழக்கில் குழந்தை பராமரிப்பாளர்கள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலைய ஊழியர்களின் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்த நபர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹமட் நகியுதீன் நவாவியை 011-21112824 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here