உலகம் முழுவதும் மகா சிவராத்திரி மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கோலாலம்பூர், கம்போங் காசிப்பிள்ளை ருத்ரா தேவி சமாஜத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் புடைசூழ மிக விமரிசையாக நடைபெற்றது. வருடந்தோறும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக ஸ்தாபகத்தின் நிறுவனர் சங்கரத்னா சுப்ரமணியம் தெரிவித்தார்.
இந்த சிவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் வகையில் சிவஶ்ரீ முத்துகுமார குருக்கள் தமதுரையில் பக்தியை நாம் உணர வேண்டும். ஆனால் தற்போது பலர் பக்தியை வெளியில் சொல்லி பெருமைப்பட்டு கொள்வதை காணும்போது மனம் வேதனை அடைகிறது.
அதே போல் வேத புத்தங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதால் பக்தி வளராது என்றும் அவர் வலியுறுத்தினார். பக்தியை நாம் உணர வேண்டுமானால் ஆத்மார்த்தமாக வேத புத்தங்களை கற்று உணர வேண்டும் என்றார் அவர்.
சிவராத்திரியின் 4 கால பூஜைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அதை நாமும் உணர்ந்து நமது அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமாஜத்தின் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தலைமையில் மகா சிவராத்திரி விமரிசையாக நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியில் ருத்ரா சமாஜத்தின் ஸ்தாபகர் சங்கரத்னா சுப்பிரமணியம் – சுப்பு லட்சுமி தம்பதியர், நன்கொடை வழங்கியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.











