நோன்பு பெருநாள் காலத்தில் மலேசியாவில் இருந்து சரவாக், சபா லாபுவான் செல்லும் விமானங்களுக்கு ஏர் ஆசியா 400 ரிங்கிட்டிற்கும் குறைவான ஒரு வழிக் கட்டணத்தை வழங்க முன்வந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்திருக்கிறார்.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 ஆம்தேதிவரை 90க்கும் மேற்பட்ட இரவு நேர விமானச் சேவைகளில் 16,000 இருக்கைகளுக்கு ஏர் ஆசியா குறைந்த கட்டணத்தை வழங்கும். மேலும் அதிக டிக்கெட் விலைகள் குறித்த புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் வழங்கிய விமான கட்டண மானியங்களை அந்தோனி லோக் சுட்டிக்காட்டினார்.
கோலாலம்பூர், கூச்சிங், சிபு, பிந்துலு, மிரி, மேலும் ஜோகூர் பாரு, கூச்சிங், சிபு இடையே ஒரு வழி விமான கட்டணம் 328 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், கோத்தா கினபாலு, சண்டக்கான் அல்லது தாவாவ், அதே போல் ஜோகூர் பாரு, கோத்தா கினபாலு இடையிலான ஒரு வழிப் பயணத்திற்கு 388 ரிங்கிட்டில் கிடைக்கும்.
ஏர் ஆசியா போன்ற முக்கிய தொழில் நிறுவனங்களுடன் பணியாற்றுவதன் மூலம் நாங்கள் தொடர்பை மேம்படுத்துகிறோம், பயணச் செலவுகளைக் குறைக்கிறோம், இறுதியில் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறோம் என ஏர் ஏசியாவின் இந்த ஆண்டிற்கான இரண்டாவது நிலையான கட்டண விமான முயற்சியை தொடக்கிவைத்த பிறகு அவர் இத்தகவலை
வெளியிட்டார்.















