லைசென்ஸ் இல்லாத விளம்பரப் பலகைகள் தகர்க்கும் நடவடிக்கையை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்டது.

ஜாலான் சைட் புத்ராவில் லைசென்ஸ் இல்லாத விளம்பரப் பலகைகளை தகர்க்கும்நடவடிக்கையை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்டது.

பொது மக்களிடம் இருந்துப் பெற்ற புகார்களின் அடிப்படையில் விளம்பர பலகை உரிமையாளருக்கு மூன்று நோட்டீஸ்களை சார்வு செய்ததாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் பதிவேற்றம் செய்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடுகளை நிறுத்தவும், இடித்து அகற்றவும், உபகரணங்களை அப்புறப்படுத்தவும் உரிமையாளருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதன் விளைவாக லைசென்ஸ் பெற்றிராத இரண்டு விளம்பரப் பலகைகளை இடித்த பின்னர் அங்கிருந்து அனைத்து குப்பைகளையும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் அகற்றியது.

மேலும் சாலைகளை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் இடங்களில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here