எல்ஆர்டி ரயில் டிரான்சிட் 3 சேவை இவ்வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி செயல்பட உள்ளது

சிலாங்கூர் ஷா ஆலம், மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் எல் ஆர் டி ரயில் டிரான்சிட் 3 Light Rail Transit 3 (LRT3) சேவை இவ்வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி செயல்பட உள்ளதாகவும் இந்தப் திட்டம் ஜூலை 31ஆம் தேதி முழுமையாக பிரசரானா மலேசியா பெர்ஹாட் Prasarana Malaysia Bhd நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது போக்குவரத்து அமைச்சு அமைச்சு பதிலில், LRT3 திட்டம் தற்போது 98.16 விழுக்காடு முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்தது.

மேலும் ரயில் இயக்கப் பரிசோதனை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் இதன் மூலம் ரயில் சேவை பயணிகளுக்குப் பாதுகாப்பானதாக இருப்பது உறுதி செய்யப்படும்.

இந்த இரண்டு பரிசோதனைகள், ரயில் அமைப்பின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, செயற்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும்.

அமைச்சின் தகவலின்படி, பரிசோதனைகள் 2025 ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாகவும் மேலும் 2025 ஜூன் மாத இறுதிக்குள் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, இறுதி இயக்க பரிசோதனையை, ரயில் சேவையின் உரிமம் பெற்ற உரிமை நிறுவனமான Rapid Rail Sdn Bhd, பிரதான ஒப்பந்தக்காரரின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும்.

இந்த இறுதி பரிசோதனை சுமார் 60 நாட்கள் நீடிக்கும் எனவும் 2025 ஜூலை மாதம் தொடங்கி, ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here