அரியானா: காங்கிரஸ் இளம் பெண் தொண்டர் படுகொலை; சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரம்

ரோத்தக்,அரியானாவில் ரோத்தக் நகரின் சம்ப்லா பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் நீல நிற சூட்கேஸ் ஒன்று மூடப்பட்ட நிலையில் நீண்டநேரம் கிடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வந்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, சூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி சம்ப்லா டி.எஸ்.பி. ரஜ்னீஷ் குமார் கூறும்போது, சம்ப்லா பஸ் நிலையத்தில் கிடந்த சூட்கேசில் பெண் ஒருவரின் உடல் கைப்பற்றப்பட்டது. அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டரான ஹிமானி நர்வால் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அரியானா போலீசார் அமைத்துள்ளனர் என்றார்.

அந்த இளம்பெண்ணின் மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சைபர் பிரிவு மற்றும் தடயவியல் துறை போலீசாரின் உதவியையும் நாங்கள் கோரியுள்ளோம். அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

நர்வாலின் தாய் மற்றும் சகோதரர் டெல்லியில் வசிக்கின்றனர். இவர் அரியானாவில் தனியாக வசித்து வந்திருக்கிறார் என டி.எஸ்.பி. கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here